காதல் விவகாரம்: பெண் எஸ்.ஐ அசிங்கப்படுத்தி கொடுமை - இளைஞர் தற்கொலை!

Tamil nadu Crime Death
By Sumathi 2 வாரங்கள் முன்

காதல் விவகாரத்தில் மோசமாக கண்டிக்கப்பட்டதால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

திருவாரூர், முகந்தனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாதா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மூத்தமகன் ராகுல்ராஜூ (22) அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதல் விவகாரம்: பெண் எஸ்.ஐ அசிங்கப்படுத்தி கொடுமை - இளைஞர் தற்கொலை! | Youth Suicide Sub Inspector Beats In Tiruvarur

இதையறிந்த பெண்ணின் பெற்றோர் செல்போன் வாயிலாக தனது மகளுக்கு ராகுல்ராஜூ தொல்லைத்தருவதாக கூறி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதில் விசாரணையின் போது ராகுல் தரப்பினரிடம் போலீசார் ரூ.5 ஆயிரம் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இளைஞர் தற்கொலை

இதனை தொடர்ந்து 5ஆயிரம் பணம் கொடுத்தபோது போலீசார் மீண்டும் 5ஆயிரம் ரூபாய் கேட்டு ராகுல் செல்போனை பறித்து வைத்துள்ளனர். இதற்கிடையில், பெண்னின் உறவினர்கள் காவல் நிலையத்திற்குள் ராகுலை தாக்கியுள்ளனர்.

மேலும் அவரிடம் இருந்த லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் மஹாலட்சுமி இளைஞரை அரை நிர்வாணப்படுத்தி அடித்து அசிங்கப்படுத்தியதாக உறவினர்கள் கூறுகின்றனர். அதில் மனமுடைந்தவர் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.