Living together..? இயக்குனருடன் நெருக்கம் - ஏமாற்றப்பட்டாரா தற்கொலை செய்த நடிகை!
நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தற்கொலை
சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா என்ற தீபா. இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்தார். சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் வாய்தா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் ஜெசிகா அழைப்பை எடுக்கவில்லை. அதன்பின் அவரது நன்பரான பிரபாகரன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கடிதம்
இந்த தற்கொலை குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கல் வெளிவந்த வண்ணம் இருந்தன. முதலில், அவர் தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதம் ஒன்று சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மற்றுமொறு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதில், சினிமா இயக்குனர் ஒருவர் தனது படத்தில் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக கூறி ஜெசிகாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக கூறி ஜெசிகாவை இரண்டாவது திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இயக்குனருடன் நெருக்கம்
லிவிங் டுகெதரில் வாழ்ந்துக் கொள்ளலாம் எனவும் அலட்சியாமாக கூறியுள்ளார். நடிகை தற்கொலை செய்துக் கொண்ட அன்று இந்த இயக்குனரை கடைசியாக சென்று சந்தித்துள்ளார். மேலும் இறுதியாக போனில் அவரைத்தான் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால், அவர் அழைப்பை எடுக்காத்தால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக அவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். ஜெசிகா 3 செல்போன்கள் உபயோகித்துள்ளார். அதில் ஒரு ஐபோன் காணாமல் போயுள்ளது.
அது கிடைத்தால் மேலும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அந்த இயக்குனர் குறித்த தீவிர விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.