மதுரை சித்திரை திருவிழாவில் கும்பல் செய்த கொடூரம்; இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை!

Madurai Death Madurai Chithirai Thiruvizha
By Swetha Apr 23, 2024 10:21 AM GMT
Report

மதுரை சித்திரைத் திருவிழாவில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பல் செய்த கொடூரம் 

உலக பிரசித்தி பெற்ற மதுரை கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நேற்று விமரிசையாக அரங்கேறியது.

மதுரை சித்திரை திருவிழாவில் கும்பல் செய்த கொடூரம்; இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை! | Youth Stabbed To Death In Chithirai Festival

அதனை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரரை உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இன்று உச்சகட்ட உற்சாகத்துடன் நிகழ்ந்தது. பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், பக்தர்கள் அலைகடலென திரண்டு வந்து வழிபட்டனர். கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்ட பக்தர்கள் அழகரை மனமுருக வழிபட்டனர். அப்போது,திருவிழாவைக் காண வந்த இளைஞர்கள், வைகை ஆற்றுக்குள் இரண்டு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.

சித்திரை திருவிழா; தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர் - உற்சாகத்தின் உச்சத்தில் மக்கள்!

சித்திரை திருவிழா; தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர் - உற்சாகத்தின் உச்சத்தில் மக்கள்!

இளைஞரை விரட்டி கொலை

கத்தி, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் விரட்டி விரட்டி தாக்கியது. இதில் மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனை ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மதுரை சித்திரை திருவிழாவில் கும்பல் செய்த கொடூரம்; இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை! | Youth Stabbed To Death In Chithirai Festival

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோனை சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

படுகாயமடைந்த கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீசார் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.