சித்திரை திருவிழா; தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர் - உற்சாகத்தின் உச்சத்தில் மக்கள்!
அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்.
புறப்பட்டார் கள்ளழகர்
மிக பிரபலாமான மதுரை அருகே உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்டார்.
இந்த நிகழ்வு நாளை அதிகாலையில் தொடங்கி மாலை 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.
உற்சாகத்தில் மக்கள்
இந்நிலையில் புறப்பட்ட அழகர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கன்னனேந்தல் வழியாக வந்த கள்ளழகர் தற்போது மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பிரமாண்டமாக ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
பிறகு, மாநகர் பகுதிக்குள் நுழைந்த கள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில் தோல்பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 480 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.