ஒரு தலைக்காதல்: 25 முறை பெண்ணின் முகத்தை பாட்டிலால் கிழித்து வாலிபர் வெறிச்செயல்!
பெண்ணின் முகத்தை, இளைஞர் பாட்டிலால் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தலைக்காதல்
கேரளா ஆம்பூரி பகுதியைச் சேர்ந்தவர் சோனு(20). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து கீழ்ப்பக்கத்தில் பிரபல ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அதற்கு அருகிலேயே விடுதியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கும் சென்னையைச் சேர்ந்த நவீன் என்பவருக்குன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவீன் கடற்படையில் வேலை செய்வதாக கூறியுள்ளார். இதில் நவீன் அந்தப் பெண்ணை ஒரு தலையாக காதலித்துள்ளார்.
பெண் மறுப்பு
அதை சோனுவிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அந்தப் பெண் அவரிடமிருந்து விலக தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் சோனுவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அவர் வேலை முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கையில் நவீன் திடீரென கத்தியை எடுத்து சோனுவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் சோனு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன்பின் நவீன் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். தொடர்ந்து, சோனுவை மீட்டு மருத்துவமனியில் அனுமதித்தனர். அதில் 25 இடங்களில் காயமிருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வாலிபர் கொடூரம்
அதன்பின் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நவீன் இதற்காக பல நாள் திட்டமிட்டதாகவும், கொலை செய்யவே முடிவு செய்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சோனு விமான பணிப்பெண்ணாக ஆசைப்பட்டதும், தன்னை காதலிக்காததால் அந்த வேலையில் சேருவதை தடுக்கவும் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.