தன்பாலின சேர்க்கைக்கு மறுத்த இளைஞர் - நேர்ந்த கொடூரம்!
தன் பாலின் சேர்க்கைக்கு மறுத்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
மயிலாடுதுறை, மூவலூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(20). இவர் கட்டுமானப் பணியாளராக உள்ளார். வேலைக்கு சென்ற நிலையில், இவர் வீடு திரும்பாததால் பெற்றோர் இவரை தேடி உள்ளனர். அப்போது ரயில்வே தண்டவாளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீஸார் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த கபிலன்(22), குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆகியோர்தான் கொலை செய்தது தெரியவந்தது.
அதிர்ச்சி தகவல்
அதனையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜ்குமாரை, கபிலனும் சிறுவனும் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்துள்ளனர்.
அதன்பின் அவரை தன்பாலின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்து தப்பித்து ஓடியுள்ளார். அப்போது இருவரும் அவரை பீர் பாட்டிலால் தலியில் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த ராஜ்குமாரின் முகத்திலும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அதன்பின் உடலை தண்டவாளத்தில் வீசி விபத்து என நாடகமாட எண்ணியுள்ளனர். இதன் அடிப்படையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.