பல் துலக்காமல் முத்தம்... - ஆத்திரத்தில் கத்திய மனைவியை குத்தி கொலை செய்த கணவன்… - அதிர்ச்சி சம்பவம்
அவினாஷ் - தீபிகா தம்பதி
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருடைய மனைவி தீபிகா. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. அவினாஷ் எப்போதும் காலை எழுந்தவுடன் தன் குழந்தைக்கு கொஞ்சி முத்தமிடுவது வழக்கம். தினமும், பல் துலக்காமல் குழந்தையை தூக்கி, கொஞ்சி முத்தமிட்டு விளையாடி வந்துள்ளார். இதைப் பார்த்த தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என்று அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.‘
மனைவியை கொலை செய்த கணவர்
இந்நிலையில், வழக்கம்போல் அவினாஷ் இன்றும் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த தீபிகா அவினாஷிடம் சண்டைப்போட்டுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவினாஷ் தனது மனைவியை கத்தியை எடுத்து சராமரியாக குத்தி தாக்கினார். இதனால் அலறி துடித்த தீபிகா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீபிகாவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் தீபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவன் கைது
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்தனர். பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.