அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஓட விட்ட கொடூரம் - அவமானத்தில் உயிரை விட்ட இளைஞர்
அரைநிர்வணமாக ஓட விட்டு சித்ரவதை செய்ததில், இளைஞர் தற்கொலை செய்துள்ளார்.
கடன் தொல்லை
விழுப்புரம், அரச மங்கலத்தை சேர்ந்தவர் வளர்மதி. இவரது இளைய மகன் சந்துரு. இவர் சேர்ந்தனூர் கிராம பாமக ஊராட்சி மன்ற துணைத் தலைவரான குமரவேலிடம் சீட்டுகட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதில், சந்துருவிற்கு 95 ஆயிரம் ரூபாய் வரை கடனாகியுள்ளது. இதனை குமரவேல் வட்டியும், முதலுமாக சேர்த்து ஒன்றே முக்கால் லட்ச ரூபாயாக திருப்பிக் கேட்டுள்ளார்.
தற்கொலை
இதில், 32 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்த சந்துரு, மீத பணத்தை விரைவில் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மறுத்து குமரவேல் தனது தரப்பினருடன் சேர்ந்து, சந்துருவை சரமாரியாக தாக்கியும், அரை நிர்வாணமாக்கியும் சாலையில் ஓட விட்டதாக கூறப்படுகிறது.
இந்த அவமானத்தால் சந்துரு, விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் உறவினர்கள் பாமக நிர்வாகியான குமரவேலுவின் மீது போலீஸில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.