நடுரோட்டில் பைக்கில் காதல் ஜோடி செய்த மோசமான செயல் - வீடியோவால் கொந்தளிப்பு!
பைக்கில் காதலர்கள் செய்த ரொமான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
சாலை விதிமீறல்
தலைநகர் டெல்லியில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் காதலியை பெட்ரோல் டேங்கில் அமர வைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் ரொமான்சில் ஈடுபட்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், மங்கோல்புரி வெளி வட்ட சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கின்றன.
அப்போது, பெட்ரோல் டேங்கில் தன்னை பார்க்குமாறு காதலியை அமர வைத்து இருந்த இளைஞர் ஒருவர், அவருடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட படியே பைக்கை அதிவேகத்தில் ஓட்டி செல்கிறார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வைரல் வீடியோ
இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல், ஹெல்மெட்டும் அணியாமல் அஜாக்கிரதையாக சென்றதற்கு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Idiot's of Delhi
— ????? ????? ?️? (@Buntea) July 16, 2023
Time - 7:15pm
Day - Sunday 16-July
Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5
தொடர்ந்து, இந்த வீடியோவிற்கு பதிலளித்த டெல்லி போக்குவரத்து காவல்துறை, இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை மீறுவோர் பற்றி தங்களது செயலியில் புகாரளிக்குமாறு கேட்டுக் கெட்டுக்கொண்டுள்ளனர்.