காதலி பெயரில் டீ கடை: COMMITTED -ஆ இருந்தா 10 ரூபா..SINGLE -னா 5 ரூபா - வைரல்!

Viral Photos Relationship Madhya Pradesh
By Sumathi Nov 23, 2022 12:08 PM GMT
Report

இளைஞர் தனது முன்னாள் காதலி பெயரில் டீ கடை ஆரம்பித்து டிஸ்கவுண்ட் வழங்கும் சம்பவம் வைரலாகியுள்ளது.

காதல் தோல்வி

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அந்தர் குஜ்ஜர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்த பெண்ணிடம் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் காதலித்து வந்து திருமணம் செய்ய முடிவும் செய்துள்ளனர்.

காதலி பெயரில் டீ கடை: COMMITTED -ஆ இருந்தா 10 ரூபா..SINGLE -னா 5 ரூபா - வைரல்! | Youth Named His Tea Shop By Lover Who Left Him

ஆனால், இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வேளையில் இவர் வேலை இல்லாமல் இருந்ததால் காதல் கைவிட்டு போனதாக வருந்தியுள்ளார். மேலும் விபரீத முடிவுக்கும் சென்றுள்ளார்.

 டீ கடை திறப்பு

அவரது நண்பர்கள் அந்த தோல்வியிலிருந்து அவரை தேற்றியுள்ளனர். இந்நிலையில், எந்த காரணத்திற்காக காதலி தன்னை விட்டு போனாரோ அதே காரணத்தை கையில் எடுத்து டீ கடை ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும் அந்த கடைக்கு தனது காதலியின் பெயரின் முதல் எழுத்தான் 'M' ஐ பயன்படுத்தி "M Bewafa Chai Wala" என பெயர் வைத்துள்ளார்.

காதலி பெயரில் டீ கடை: COMMITTED -ஆ இருந்தா 10 ரூபா..SINGLE -னா 5 ரூபா - வைரல்! | Youth Named His Tea Shop By Lover Who Left Him

தொடர்ந்து, ஜோடியாக இருப்பவர்கள் அல்லது வரும் நபர்களுக்கு ஒரு டீயை 10 ரூபாய்க்கும், காதலில் தோல்வி அடைந்து மனமுடைந்த நபர்களுக்கு ஒரு டீயை 5 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார். இச்செயல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.