பிரபல நட்சத்திர ஓட்டலில் தோழியுடன் தங்கிய இளைஞர் - ஆடை இல்லாமல் சுற்றி திரிந்ததால் பரபரப்பு!
நட்சத்திர ஓட்டலில் காதலியுடன் தங்கிய இளைஞர் நிர்வாணமாக வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நட்சத்திர ஓட்டல்
சென்னை, எம்.ஆர்.சி.நகரில் கடற்கரையை ஒட்டி மிகப்பெரிய தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. அதில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியுடன் இரண்டு நாட்களாக அறை எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது மது அருந்தி போதை தலைக்கேறியதில் நிர்வாணமாக ஓட்டல் வளாகத்துக்குள் சுற்றி வந்துள்ளார். மற்ற அறைகளுக்குள் அத்து மீறி புகுந்து அங்கிருந்த சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
மது போதை
உடனே அவரை ஓட்டல் ஊழியர்கள் மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். தொடர்ந்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார், அந்த நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர். காதலியுடன் 2 நாட்களுக்கும் மேலாக நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இரவு மதுகுடித்து, உச்சக்கட்ட போதையில் அப்படியே வெளியில் வந்தது தெரியவந்தது.