65 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த இளைஞர்கள் - கொடூர பின்னணி!
மூதாட்டியை வட மாநில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கோவை அருகே கிராமம் ஒன்றில் தனியாக வசித்து வருபவர் 65 வயது மூதாட்டி. இவரது வீட்டருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு வட மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அதிகாலையில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற வடமாநில இளைஞர்கள் 3 பேர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இளைஞர்கள் கொடூரம்
தொடர்ந்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற 3 இளைஞர்களில் இருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய இளைஞரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையில், மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.