பெண்ணாக மாற முயன்ற திருநங்கை - ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடுமை!

Attempted Murder Crime Death Transgender Tenkasi
By Sumathi Mar 07, 2025 04:46 AM GMT
Report

பெண்ணாக மாற முயன்ற திருநங்கை துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

பெண்ணாக மாற முயற்சி

தென்காசி, ஆலங்குளம் அருகே பரும்பு மாடி தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை மகாலட்சுமி. இவருடன் அரசர்குளத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் கடந்த 2 வாரங்களாக தங்கியிருந்துள்ளார்.

பெண்ணாக மாற முயன்ற திருநங்கை - ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடுமை! | Transgender Woman Dies Transition To Woman Tenksai

இந்நிலையில், மகாலட்சுமியின் வீட்டில் சைலு திடீரென்று மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

14 வயது சிறுமிக்கு திருமணம்; வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற கொடுமை - வைரல் வீடியோ

14 வயது சிறுமிக்கு திருமணம்; வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற கொடுமை - வைரல் வீடியோ

திருநங்கை பலி

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சைலு பெண்ணாக மாறுவதற்காக அவரது மர்ம உறுப்பை மகாலட்சுமியும்,

பெண்ணாக மாற முயன்ற திருநங்கை - ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடுமை! | Transgender Woman Dies Transition To Woman Tenksai

மற்றொரு திருநங்கையான மதுமிதா என்பவரும் சேர்ந்து கத்தியால் அறுத்ததும், இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் அவர் இறந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், மகாலட்சுமி, மதுமிதா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், இருவரும் ஏற்கனவே பெண்ணாக மாற முயன்ற பலருக்கு மர்ம உறுப்பை அறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.