காவல்நிலையம் முன்பே இளைஞரை விரட்டி படுகொலை - பட்டப்பகலில் பயங்கரம்!
அம்பத்தூர், காவல் நிலையம் எதிரே இளைஞரை விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் படுகொலை
சென்னை அம்பத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த்வர் கார்த்திக்(20). இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வருகிறார். நேற்று சாலையில் கார்த்தி நடந்து சென்றிருந்துள்ளார்.
அப்போது அங்கு திடீரென வந்த 9 பேர் கொண்ட கும்பல் கார்த்திகை அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி காவல்நிலையம் முன்பே சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்விரோதம்
இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்திக் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் காவல்நிலையம் எதிரே இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.