கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்.. ஊசி வைத்து தைத்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
கிழிந்த ஜீன்ஸ் பேண்டை தைத்ததால் இளைஞர் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
ஜீன்ஸ் பேண்ட்..
தட்சிண கன்னடா மாவட்டம், பனகஜே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாகிப். இவரது மகன் சாகீல் (21). இவர் நேற்று முன்தினம் டவுனுக்கு இன்றையை மாடர்ன் உடையை அணிந்து வந்தார். வெள்ளை நிற 'டி-சர்ட்' மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.
ஆனால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் நவநாகரீக முறையில் ஆங்காங்கே கிழிந்த நிலையில் இருந்தது. இந்த உடையில் டவுனுக்கு வந்த சாகீல் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு அவர் சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
அந்த சமயம் அங்கு வந்த லாயிலா கிராமம் புத்ரபைலு பகுதியைச் சேர்ந்த சபீர், அனீஷ் பனகஜே, பாப் ஜான் சாகேப் ஆகிய மூவரும் சேர்ந்து சாகீலை வழிமறித்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த கிழிந்த ஜீன்ஸ் பேண்டை பார்த்து இதையெல்லாம் அணிந்து வரக்கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
விபரீத முடிவு
அப்போது 3 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சபீர் உள்ளிட்ட 3 பேரும் சாகீலை பிடித்து ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணலை வாங்கி அவரது ஜீன்ஸ் பேண்ட்டை தைத்தனர். இதனை இன்னொருவர் வீடியோ எடுத்தார்.
பின்னர் அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அது வைரலாகி வருகிறது. தான் அவமானம்பட்ட வீடியோ வைரலானதை பார்த்து மன வேதனை அடைந்த சாகீல், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த அவரது வீட்டின் கார் டிரைவர்,
சாகீலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இதுவரை போலீசில் சாகீல் தரப்பில் புகார் அளிக்கவில்லை. எனினும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.