Thursday, May 1, 2025

மீள முடியாத மதுப்பழக்கம் - இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Erode
By Karthikraja 6 months ago
Report

மதுப்பழக்கத்ததிலிருந்து மீள முடியாத இளைஞர் மண்ணெண்னையை குடித்து உயிரிழந்துள்ளார்.

மதுப்பழக்கம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பனக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்த சாந்தியின் மகன் வெள்ளியங்கிரி(18). 

gopi chettipalayam

8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள வெள்ளியங்கிரி, அதன் பின் படிப்பை நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. 

வயிற்றில் தானாக சுரக்கும் ஆல்கஹால் - வினோத நோயால் அவதிப்படும் பெண்

வயிற்றில் தானாக சுரக்கும் ஆல்கஹால் - வினோத நோயால் அவதிப்படும் பெண்

உயிரிழப்பு

கூலி வேலைக்குச் சென்று வருவதால் கிடைக்கும் பணத்தில் தொடர்ந்து மது அருந்தி மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தில் இருந்து மீள முடியாத சோகத்தில் கடந்த 06.11.2024 அன்று இரவு வீட்டில் இருந்த மண்ணெண்னையை குடித்துள்ளார். 

death

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றினர். சிகிச்சை பலனளிக்காத வெள்ளியங்கிரி நேற்று(12.11.2024) உயிரிழந்துள்ளார்.