தனியாக வசிக்கும் பெண்களை.. இளைஞர் செய்த அசிங்கம் - போனில் சிக்கிய ஆபாசப்படம்!
பெண்களை மயக்கி ஆபாசபடம் எடுத்து அவர்களை மிரட்டி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களை..
மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்அஜீஸ். இவரது மகன் ஜாகிர் ஹூசைன் (24). இவர் திருவிழந்தூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
மேலும் அவரிடைருந்து பல தவணைகளாக 14 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று வந்துள்ளார். பிறகு அந்த பெண்ணுடன் அவ்வப்போது பாலியல் உறவு வைத்தக் கொண்டதோடு அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி அந்த பெண்ணுடன் ஜாகிர் ஹூசைன் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் அந்த பெண் கர்ப்பமடைந்தார்.
இதையறிந்த ஜாகிர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் கர்ப்பத்தை கலைத்து விடுமாறு அந்த பெண்ணிடம் கூறினர். ஆனால் அதற்கு அவர் மறுப்பி தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் ஜாஹிர் ஹுசைனின் குடும்பத்தினர் மொத்தமாக சேர்ந்து கட்டாயப்படுத்தி
பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஜாஹிர் ஹூசைன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளிக்க சென்றுள்ளார்.
இளைஞர்
கடந்த 2019ம் ஆண்டு ஜாஹிர் இதே போல் திருமணமான தனது உறவினர் பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி 2 மாதங்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு நகை, பணம் மற்றும் வீட்டு பத்திரத்தை பறித்துக் கொண்டு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது உறவினர்கள் மீட்டு அவருக்கு வேறொருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது, கணவருடன் வெளியூரில் வசிக்கும் அந்த பெண் ஜாகிர் ஹுசைனால் தான் பாதிக்கப்பட்டது குறித்து பேசி வீடியோ பதிவை காவல்நிலையத்திற்கு அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்களுமே ஹூசைனால் தாங்கள் மட்டுமின்றி வேறு சில பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை எண்ணி புகார் அளிக்க அச்சப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
அப்போது தான் ஜாகிர் தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி நகை, பணம், சொத்து என வாங்குவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக
காவல் நிலையத்துக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 30-க்கு மேற்பட்டோர் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலிலேயே போலீசாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு ஜாகிர் ஹூசைன் மீது போலீசார் 5 பிரிவுகளுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.