அந்த மாறி பேசலாமா..பிரபல நடிகையை ஆபாசமாக டார்ச்சர் செய்த இளைஞர் -என்ன நடந்தது?
பிரபல நடிகை மீது அவதூறு கருத்துகள் பரப்பியதாக 28 வயது இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகைக்கு டார்ச்சர்
நடிகை மாளவிகா மேனன் விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாரித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மேனனுக்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரை குறித்து பல அவதூறு கருத்துகளை வெளியிட்டதுடன்,
மாளவிகா மேனன் அணியும் ஆடைகள் குறித்தும் ஆபாசமாக விமர்சனம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரின் செயல் எல்லை மீறியதால் பொருமையை இழந்த அவர் வேறு வழியின்றி போலீசில் புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இளைஞர்
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்ணியமற்ற முறையில் யார் குறித்தும், வாய்க்கு வந்தபடி எப்படியும் பேசலாம் என தமக்கு உரிமை இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். இதன் உச்சமாக, தான் பங்கேற்கும் விழாவுக்கு என்ன ஆடை அணிந்து வருவீர்கள் என்று கூட,
சிலர் போன் செய்து விசாரிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தான் அணியும் ஆடைகள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் இளைஞர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சைபர் கிரைம் போலீசில் மாளவிகா மேனன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், நடிகை மாளவிகா மேனன் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியவர் பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் ரவீந்திரன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, 28 வயதுடைய அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், நடிகை மாளவிகா மேனன் மட்டுமின்றி வேறு எந்த பெண்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பினாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.