ஆசையாக..சாப்பிட்ட பட்டர் சிக்கன் - 27 வயது இளைஞர் மரணித்த ஷாக் சம்பவம் !
இளைஞர் ஒருவர் சாப்பிட்ட பட்டர் சிக்கனால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டர் சிக்கன்
இங்கிலாந்தில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர், பூரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் கிகின்சன் ( 27). இவர் கடந்த மாதம், பட்டர் சிக்கன் குழம்பை சாப்பிட ஆசையாக இருந்ததால் அருகில் உள்ள உணவகத்தில் வாங்கியுள்ளார்.
பின்னர், அந்த குழம்பின் ருசிகரிக்கும் சுவையில் மெய் மறந்து அவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறார். அந்த உணவகத்தில் செய்யப்படும் பட்டர் சிக்கன் குழம்பில் பாதாம் உட்பட பிற பொருட்களும் சேர்த்து பிரத்யேகமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இளைஞர் உயிரிழப்பு
ஏகப்பட்ட கலோரிகளை கொண்ட இந்த குழம்பை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட ஜோசபுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
முதலில், அலர்ஜியில் பாதிக்கப்பட்டபோது சுயமாக மருந்து எடுத்துக்கொண்டும், எந்த பலனும் அளிக்கவில்லை. மேலும், ஜோசபின் உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்ததை கவனித்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இதனையடுத்தது, மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிர அலர்ஜி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஜோசப், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் நேரடியாக பாதித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உணவு விஷமாக மாறி அவரின் மரணம் நடந்துள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.