திருமணத்திற்கு முன்பே ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றுக்கொண்டாரா? இளைஞர் வீடியோவால் பரபரப்பு
நான் தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய்
இந்தியாவிலிருந்து பல பேர் உலக அழகிப்பட்டம் பெற்றிருந்தாலும் மக்கள் மனதில் சட்டென வருபவர் ஐஸ்வர்யா ராய்தான்.

ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
விவாகரத்து
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சக நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே இவருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே விவாகரத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு அபிஷேக் பச்சன் தெரிவித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராய் மகன்
இந்நிலையில் நான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பேசும் சங்கீத் குமார் என்ற நபர், ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதில் தான் பிறந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், லண்டனில் IVF மூலம் தான் பிறந்ததாகவும், லண்டனில் பிறந்த பிறகு ஐஸ்வர்யாவின் பெற்றோர் தன்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்த்து வளர்த்ததாகவும் கூறியுள்ளார். தன்னுடைய பிறப்பு தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவில் பேசிய நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும், மேலும் இந்த வீடியோ 6 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என்றும் தற்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil