மகள் குறித்த கேள்வி - டென்ஷன் ஆன ஐஸ்வர்யா ராய்
மகள் குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராய் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்
இந்தியாவிலிருந்து உலக அழகிப்பட்டம் பல பேர் பெற்றிருந்தாலும் மக்கள் மனதில் சட்டென வருபவர் ஐஸ்வர்யா ராய்தான்.
ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
விவாகரத்து
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய இவர் 2007 ம் ஆண்டு சக நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக இவருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே விவாகரத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அபிஷேக் பச்சன்.
கோபமடைந்த ஐஸ்வர்யா ராய்
அபுதாபியில், IIFA உற்சவ விருதுகள் வழங்கும் விழாவில், பொன்னியின் செல்வன்- 2 படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராய்க்கு விருது வழங்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில், பெரும்பாலான நிகழ்ச்சியில் தங்கள் மகள் ஆராத்யா கலந்து கொள்கிறாரே ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஐஸ்வர்யா ராய், அவள் தன்னுடைய மகள் என்பதால் தன்னுடன் இருக்கிறார், நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என ஆவேசமாக பதிலளித்தார்.