வேறு பெண்ணுடனான திருமணத்தை நிறுத்திய காதலி - 3 நாட்களுக்குப்பின் இளைஞர் உடல் மீட்பு
திருமணத்தை காதலி நிறுத்தியதால் தற்கொலை செய்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை
சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு 10ம் வகுப்பு படிக்கும்போது நிஷாந்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கல்லூரியில் சேர்ந்த பிறகும் உறவு தொடர்ந்துள்ளது. மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ரூ.68 லட்சம் பணமும் வாங்கியுள்ளார். இதற்கிடையில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில், பிரபல தனியார் மருத்துவமனையில் சிஇஓ மற்றும் தொழில் அதிபரின் மகளை நிஷாந்த் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
தற்கொலை
இதனை அறிந்த இளம்பெண் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில் அதிபர் மகளுடன் நிஷாந்துக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தலைமறைவான நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
அதன்பின் தகவலறிந்து வந்த போலீஸார் தீ அணைப்பு வீரகள் உதவியுடன் உடலை தேட ஆரம்பித்தனர். மூன்று நாட்களுக்கு பின்னர் இளைஞர் உடல் மீட்கப்பட்டது.