10ம் வகுப்பில் தொடங்கிய நெருக்கம்; பாலியல் வன்கொடுமை - காதலி புகாரால் ஏரியில் குதித்த இளைஞர்
காதலியின் புகாரால் தற்கொலை செய்ய இளஞர் ஏரியில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு 10ம் வகுப்பு படிக்கும்போது நிஷாந்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கல்லூரியில் சேர்ந்த பிறகும் உறவு தொடர்ந்துள்ளது.
மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரூ.68 லட்சம் பணமும் வாங்கியுள்ளார். இதற்கிடையில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியுள்ளார்.
இளைஞர் தற்கொலை
ஆனால் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில், பிரபல தனியார் மருத்துவமனையில் சிஇஓ மற்றும் தொழில் அதிபரின் மகளை நிஷாந்த் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தொழில் அதிபர் மகளுடன் நிஷாந்துக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தலைமறைவான நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். போலீஸார் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நண்பர்களுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.