மகளின் கண் முன்பே அப்பாவை கொடுமையாக தாக்கிய குடிகார இளைஞர்கள் - பரபரப்பு!
மதுபோதையில், கல்லூரி வாசலில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ரகளை
மதுரையில், மீனாட்சி அரசு கலை கல்லூரி உள்ளது. அதற்கு முன்பாக ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றது. அப்போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் ஆபாச வார்த்தைகளை பேசியவாறு சென்றனர்.
இந்நிலையில், கல்லூரி வாயில் முன்பாக நின்ற மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால், அங்கிருந்த மாணவி இருவரின் தந்தை இதனை பார்த்துவிட்டு காலேஜ்கிட்ட ஏன் இப்படி பண்றீங்க மாணவிகள் பயப்படுறாங்க என கூறியுள்ளார்.
அதிர்ச்சி செயல்
இதனால், கோபமடைந்த அந்த இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கல்லூரி முன் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, மதுரையில் இந்த மாதிரியான சம்பவங்கள் ஏற்படும் நிலையில், மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.