39 வயது பெண்ணுடன் 21 வயது இளைஞர் காதல் - 2 குழந்தைகள் கதி!
தகாத உறவில் இருந்த மகன், தந்தையை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
ஆந்திரப்பிரதேசம், சித்தூரை சேர்ந்தவர் டில்லி பாபு. இவரது மகன் பரத்(21). கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை செய்த பணத்தை வீட்டிற்கு தராமல் இருந்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவரது தந்தை இவர் போக்கை கவனித்து வந்துள்ளார். அப்போது, மகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவரை விவாகரத்து செய்த 39வயது பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கொடூர தாக்குதல்
மேலும் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு செலவு செய்துள்ளார். இதனால் பரத் தந்தை அவரை கண்டித்துள்ளார். அந்த உறவை மகன் கைவிடாததால், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். தொடர்ந்து போலீஸில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை இரும்பு ராடால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வீடியோ கால் மூலம் அந்தப் பெண்ணுக்கும் காட்டியுள்ளார்.
அதனையடுத்து அக்கம்பக்கத்தினர் டில்லி பாபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.