பெண் பார்த்து தருமாறு எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்த இளைஞர் - 90's கிட்ஸ்சா இருப்பாரோ?
இளைஞர் ஒருவர் எம்எல்ஏவிடம் பெண் பார்க்கும்படி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொண்ணு கிடைக்கல..
மகாராஷ்டிரா, ஔரங்காபாத் மாவட்டத்தில் குல்தாபாத் என்ற பகுதியை சார்த்த இளைஞர் ஒருவர் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு போன் போட்டு தனக்கு பெண் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். பின்பு தனக்கு , 8 ஏக்கர் நிலம் உள்ளது.

பல இடங்களில் பெண் தேடியும் கொடுக்க யாரும் தயாராக இல்லை. இதனால் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளேன். அதனால் நீங்கள்தான் எனக்கு பெண் பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே எம்.எல்.ஏ ராஜ்புத், உங்களோட பயோடேட்டாவை தனக்கு அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார்.
குமுறிய இளைஞர்
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ ராஜ்புத், 2,000 பேர் வசிக்கும் கிராமம் என்றால், அங்கு சுமார் 100-150 திருமணமாகாத இளைஞர்களைக் காணலாம்.
அவர்களுக்கு 100 ஏக்கர் நிலம் இருந்தாலும், திருமணத்திற்குப் பெண் கிடைப்பது கடினம் என்று கூறினார். இந்த சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.