பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காதலன்!
17 வயது மாணவியை, கடத்தி பேருந்தில் காதலன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஃபேஸ்புக் பழக்கம்
சேலம், ஆத்தூர் அருகே தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் அதே பகுதியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாணவியை நேரில் பார்க்க சென்றுள்ளார் தினேஷ். அப்போது, சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், திடீரென சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போகியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இதுகுறித்து, பெற்றோர் தினேஷ்குமார் என்பவர் மகளை கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸில் புகாரளித்தனர். அதனையடுத்து போலீஸார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். அதன்பின், சிறுமியை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக காதலன் தினேஷ் குமார் ஆசைவார்த்தை கூறி, அவரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். வண்டலூரில் நண்பர்களின் உதவியோடு திருமண ஏற்பாடு செய்தபோது, மாணவிக்கு 17 வயது என்பது தெரிந்து, திருமணம் செய்துவைக்க மறுத்துள்ளனர்.
ஏமாற்றிய காதலன்
மேலும், மீண்டும் ஆத்தூருக்கு தனியார் பேருந்தில் இருவரையும் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். அதில், தினேஷ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு விட்டு, தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.