கூட்டு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும்... - கதறிய தந்தை!
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துஅதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதனை அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். தொடர்ந்து, இந்த வீடியோவை காட்டி அடிக்கடி சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் ரூ.50,000 கொடுத்தால் மட்டுமே இந்த வீடியோவை வெளியிட மாட்டேன் என்று அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் இந்த தொகையை ரூ.2.5 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இவ்வளவு பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
வீடியோ எடுத்து மிரட்டல்
சிறுமியால் இந்த பணத்தை கொடுக்க முடியாத காரணத்தால் இளைஞர்கள் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதனையடுத்து, இந்த சம்பவம் சிறுமியின் தந்தையின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதை கண்டு அதிர்ந்துபோன தந்தை கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். அதன்பின், தந்தை உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.