அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு!
தொடர்ந்து பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கொலை
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷோபா (48). கணவரை பிரிந்த இவர், தனது 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷோபா படுக்கையறையில் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நவீன் (27) என்ற வாலியாருடன் ஷோபா தகாத உறவில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, ஷோபாவை கொலை செய்ததை நவீன் ஒப்புக்கொண்டார்.
மேலும், தொடர்ந்து தன்னை பாலியல் உறவுக்கு ஷோபா வற்புறுத்தியால், அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு ஆப் மூலம் நவீனுக்கு ஷோபா அறிமுகமாகியுள்ளார்.
என்ன காரணம்
பின்னர் இருவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இதனையடுத்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை ஷோபா செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். ஆனால், அடிக்கடி உல்லாசம் அனுபவிக்க அழைத்ததால், ஷோபா மீது நவீனுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரை விட்டு விலக முடிவு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷோபா, தன்னை விட்டு விலகினால் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் நவீன் அவரை கொலை செய்துள்ளார்.
நவீன் தவிர மேலும் 20 வாலிபர்களுடன், ஷோபா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடனும் தனிமையில் இருந்து வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் அந்த வாலிபர்களை திருமணம் செய்துகொள்ள கூடாது என்றும் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.