சாரைப்பாம்பு சமையல் - வீடியோவால் சிறை சென்ற இளைஞர்
சாரைப்பாம்புவை சமைத்து சாப்பிடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று அதை சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும் பாம்பை கொன்று அதன் தோலை உரித்து குடல் நீக்கிய பின் பாத்திரத்தில் நிரப்பியுள்ள தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்துகிறார்.
இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த வீடியோ திருப்பத்தூர் வனத்துறையினரின் கவனத்துக்கும் சென்றது.
கைது
இது தொடர்பாக, வழக்குப் பதிந்த வனத்துறையினர் ராஜேஷ்குமாரை வீடு தேடிச் சென்று கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், ராஜேஷ் குமார் சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷ்குமாரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.