4 வயது சிறுமிக்கு 44வயது நபர் பாலியல் வன்கொடுமை - தொடரும் அவலம்!
4 வயது சிறுமிக்கு 44 வயதான நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
திருப்பத்தூர், வாணியம்பாடியில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சையது லியாகத்(46). கூலித் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன், பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமியுடன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்குள் அழைத்துச்சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
போக்சோவில் கைது
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் சையது லியாகத்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி மகளிர் காவல் நிலைய போலீஸார் சையது லியாகத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.