உல்லாசத்திற்கு வா இல்ல பணம் கொடு மறுத்தால் வீடியோ பறக்கும் - திருமணமான பெண்களை டார்கெட் செய்த இளைஞர்!

Sexual harassment Karnataka Crime
By Vinothini Sep 05, 2023 06:48 AM GMT
Report

சமூக வலைத்தளம் மூலம் பெண்களை பேசி மயக்கி காதல் வலையில் சிக்க வைத்து இளைஞர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் எச்.எஸ்.ஆர். படாவனே பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர் இன்ஸ்டாகிராம், முகநூல்(பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வந்தார்.

younster-targeted-married-women-and-misbehaved

அதன்மூலம் வாலிபர் ஒருவர் பழக்கமானார் அவருடன் நெருங்கி பழகி வந்தார், பிறகு அவர் தனக்கு ஒரு குடும்பம் இருப்பதை மறந்து அண்டனஹ வாலிபனாரை காதலித்தார். இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலையால் இந்த பெண் உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

இளைஞர் செய்த காரியம்

இந்நிலையில், அந்த இளைஞர் அவர்கள் உல்லாசமாக இருந்தபொழுது மறைமுகமாக எடுத்த வீடியோக்களை வைத்துக்கொண்டு, பல லட்சம் பணம் கேட்டுள்ளார், அதனை தர மறுத்தால் அவரது கணவருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பணம் கொடு இல்லையெனில் உல்லாசத்திற்கு வா இல்லையென்றால் வீடியோவை கணவருக்கு அனுப்பிவிடுவேன் என்று கூறியதாக இந்த பெண் போலீசில் புகாரளித்துளார்.

younster-targeted-married-women-and-misbehaved

பின்னர் அந்த இளைஞர் அந்த பெண்ணை அழைத்தார், அப்பொழுது சென்னைக்கு வருமாறு கூறினார், அங்கு போலீசார் சென்று அந்த இளைஞரை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணையில், அந்த வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பைசல்(வயது 26) என்பதும், கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் பெங்களூருவில் தனியாக அறை எடுத்து தங்கி ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் இதுபோல் ஏராளமான திருமணமான பெண்களை சமூக வலைதளம் மூலம் வசீகரித்து காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து, வீடியோ எடுத்து பணம் பறித்து வந்தது தெரியவந்தது.