காதலி வேண்டும்; சொமேட்டோவில் தேடிய இளைஞர்கள் - சுவாரஸ்ய தகவல்!
சோமேட்டோவில் இளைஞர்கள் காதலியை தேடிய தகவல் கவனம் பெற்றுள்ளது.
சோமேட்டோ
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி தளங்களில் ஒன்று சொமோட்டோ. கடந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடிய தேடல்கள் மற்றும் ஆர்டர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில், பெங்களூரில், மும்பையை விட 30 லட்சம் கூடுதல் ஆர்டர்கள் பெறப்பட்டாலும் வருவாயைப் பொறுத்த வரையில் மும்பை தான் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவில் மே மாதம் 12-ஆம் தேதி அன்று 3 கோடி ஆர்டர்கள் பெறப்பட்டன.
காதலி தேடல்
அதே நேரம் ஜனவரி 29-ஆம் தேதி அன்று 16.8 லட்சம் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டின் புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் போது கிடைத்த ஆர்டர்களை விட இந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகரித்துவிட்டன.
குறிப்பாக 2024-ஆம் ஆண்டில் 4940 பேர் சோமேட்டோவில் "காதலியை" தேடியுள்ளனர். இதில் 40 பயனர்கள் "துல்ஹான்" என்று சோமேட்டோவில் தேடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.