ரூ.1 கோடிக்கும் அதிக சம்பளத்தில் வேலை - தயங்கும் இளைஞர்கள், என்ன காரணம்?

United States of America
By Vinothini Jun 15, 2023 07:24 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 அமெரிக்காவில் ரூ.1 கோடிக்கும் அதிக சம்பளத்தில் ஒரு வேலை இருப்பதாக விளம்பரம் அளித்தனர், அதற்க்கு மக்கள் விண்ணப்பிக்க மறுத்து வருகின்றனர்.

வேலை விளம்பரம்

தற்போது சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரத்தின்படி, டவர் லான்டர்ன் சேஞ்சர் என்ற ஒரு பணிக்கு ரூ.1 கொடிக்கும் அதிகமான சம்பளம் தருவதாக இருந்தது. இந்த வேலை அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் வெளிவந்துள்ளது.

youngsters-refusing-high-salary-job

இதில் பல்பு மாட்டும் பணிக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் சம்பளமா என்பது வியப்பாக இருக்கலாம், ஆனால் இதில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம் என கூறப்படுகிறது. உயிரைப் பணயம் வைத்து பணி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பணியின் முதல் ரூல். இதனால் அனைவரும் விண்ணப்பிப்பதற்கு தயங்கி வருகின்றனர்.

பணி விபரம்

இதனின் தொடர்ந்து, இந்த வேலை குறித்த தகவல்களின்படி "1,500 அடி உயரமுள்ள ஒரு கோபுரத்தில் ஏறி அந்த நபர் பல்பை மாட்ட வேண்டும். உயரம் என்பதே பலருக்கும் திகிலாக இருக்கும்.

youngsters-refusing-high-salary-job

ஆனால் இதில் பாதுகாப்பை பொறுத்தவரை ஒரு நீண்ட கயிறுதான் சப்போர்ட். அந்த நிறுவனமே இதற்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கிறது. மேலே செல்ல செல்ல கோபுத்தின் கம்பி மெல்லிசாக மாறும், அதன்பின் உச்சியை அடைந்ததும் அதன் பல்பை மாற்ற வேண்டும்.

இந்த கோபுரத்தில் ஏறுவதற்கு சுமார் மூன்று மணிநேரம் ஆகும். மொத்தமாக ஆறு முதல் ஏழு மணிநேரம் ஆகும். அதுமட்டுமில்லாமல், ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த பல்பை மாற்ற வேண்டும்" என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், விண்ணப்பிக்கும் நபரின் அனுபவம், வானிலை என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு கூட்டல் குறைச்சலாக ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த பணியில் அதிக ரிஸ்க் இருப்பதால் இதில் விண்ணப்பிப்பதற்கு தயங்குகின்றனர்.