குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் இந்தியர்கள்...அதிக சம்பளத்தில் வேலை வேண்டாமாம் - காரணம் என்ன ..?

By Thahir Mar 14, 2023 11:23 AM GMT
Report

இந்தியர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் மனப்பான்மை 

பொதுவாக அதிக சம்பளத்தை எதிர் பார்த்தே ஊழியர்கள் வேலைக்கு சேர்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்தில் வேலை செய்ய விரும்புவதில்லை, குறைந்த சம்பளம் உள்ள வேலை போதும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்து தனியார் நிறுவனத்தின் கருதுக்கணிப்பு ஒன்று பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் இந்தியர்கள்...அதிக சம்பளத்தில் வேலை வேண்டாமாம் - காரணம் என்ன ..? | Indian Employees Willing To Quit High Paying Jobs

தனியார் நிறுவன கருத்துக்கணிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த மனித மூலதன மேலாண்மை தேர்வுகள் அமைப்பு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் ஊழியர்கள் மனநிலை குறித்து கருதுக்கணிப்பு எடுத்தது.

அதில் இந்தியாவில் மனநிம்மதியான வேலை குறைந்த சம்பளத்தில் இருந்தால் போதும் என்ற மனப்பான்மை சுமார் 88% சதவீதம் ஊழியர்களின் விருப்பமாக இருப்பதாகவும் மேலும் அதிக சம்பளம் உள்ள வேலையில் மன அழுத்தும் நிறைந்து இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர் இதே கருத்தை அமெரிக்க ஊழியர்கள் 70% பேர் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் கருத்து

பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும் பொது எப்போதும் சிக்கலாக இருப்பதாகவும் அதனால் வேலை முடியும் பொது சோர்வாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் இந்தியர்கள்...அதிக சம்பளத்தில் வேலை வேண்டாமாம் - காரணம் என்ன ..? | Indian Employees Willing To Quit High Paying Jobs

அதிக சம்பளம் உள்ள வேலையில் அதிக இலக்கு மன ஆரோக்கியத்தை பாதிக்கப்படுத்துவதாகவும். குறைந்த சம்பளம் உள்ள வேலையில் எவ்வித இலக்கு இல்லை என்பதினால் மன நிம்மதியுடன் வேலை முடிந்து வீட்டீற்கு செல்வதாக கூறுகிறார்கள்.

இதனால் வேலை முடித்த பிறகு வீட்டிற்கு சென்ற பிறகும் தங்களுக்கு எவ்விதமான அழுத்தமும் தங்களுக்கு இல்லை என்று கருத்துக்கணிப்பில் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேனேஜர் பணியில் உள்ள சுமை

குறிப்பாக மேனேஜர் போன்ற பணிகளில் தங்களுக்கு கீழ் பணிபுரிம் ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேலையை முறையாக செய்கிறார்களா என்பதனை கண்காணித்து வேலையினை வாங்க வேண்டும் என்பது மிக கடினமான அழுத்தம் நிறைந்த பணியாக உள்ளது.

அந்த பணி தங்களுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் சரியாக வேலை செய்யவிட்டால் மேல் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளதால் பெரும்பாலும் மேனேஜர் பணியினை செய்ய இந்தியர்கள் விரும்புவதில்லை. என்று கூறப்படுகிறது.

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்

கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு பிறகு பெரும்பாலான ஊழியர்கள் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

குறைந்த சம்பளமாக இருந்தாலும் மன ஆரோக்கியம் முக்கியம் என்பதனை புரிந்து வைத்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

அமெரிக்கா ,ஆஸ்திரேலியா ,நியூஸ்லாந்து ,கனடா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த 2000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாகவும் மொத்தத்தில் இந்த கருத்துக்கணிப்பில் மனநலம், மனநிம்மதி, அவ்வப்போது விடுமுறை ஆகியவைகளையே விரும்புகிறார்கள் ,இந்திய ஊழியர்கள் சுமார் 88% சதவீதம் இதனையே விரும்புகிறார்கள் என்பது ஆய்வு முடிவில் தெரிவிக்கப்படுள்ளது.