காதலியின் கல்யாணத்தை நிறுத்த போஸ்டர் ஒட்டிய இளைஞர் - பேரதிர்ச்சியில் குடும்பம்!
காதலியின் திருமணத்தை நிறுத்த இளைஞர் ஒருவர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலி திருமணம்
வேலூர், செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வடிவரசன்(26). ஜேசிபி டிரைவராக உள்ளார். பரதராமி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளனர். மேலும், லத்தேரி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து காட்பாடி அருகே திருமணம் நடைபெற இருந்தநிலையில்,
போஸ்டரால் சர்ச்சை
காதலியை பலி வாங்கும் நோக்கில் வடிவரசன் அந்த இளம் பெண்ணுடன் ஜோடியாக இருப்பதைப் போன்று போஸ்டரை ராணுவ வீரர் உள்ள கிராமப்புற பகுதிகளில் ஒட்டியுள்ளார்.
இதனைக் கண்ட பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போஸ்டர்களை கிழித்துள்ளனர். அதனையடுத்து இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், தீவிர விசாரணையில் வடிவரசன் கைது செய்யப்பட்டார்.