காதலிக்காக ஆசை ஆசையாக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்!

Pakistan Death Junk Food
By Swetha Apr 26, 2024 05:18 PM GMT
Report

காதலிக்காக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காதலி பர்கர் 

காதலர்கள் ஒருவருக்கொருவர் பிடித்ததை வாங்கி பரிசளிப்பது வழக்கம், அதிலும் தீவிர காதலில் இருக்கும் காதலர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்து கொள்வார்கள், குறிப்பாக யாரேனும் அதை பயன்படுத்தினால் கடும் கோபம் வரும்.

காதலிக்காக ஆசை ஆசையாக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்! | Youngster Killed His Friend For Girl Friend Burger

அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த டேனியல் என்பவர் தனது காதிலாக ஆசை ஆசையாக வாங்கிய பர்கரில் அவரது நண்பரான அலி கீரியோ என்பவரை சுட்டுக்கொன்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று டேனியல் தன் காதலி ஷாஜியாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்திருந்தார்.

இந்தியர்களுக்கு பீட்சா, பர்க்கர், ஐஸ்க்ரீம் அறிமுகம் செய்ததே இவர்தான் - யார் இவர்?

இந்தியர்களுக்கு பீட்சா, பர்க்கர், ஐஸ்க்ரீம் அறிமுகம் செய்ததே இவர்தான் - யார் இவர்?

நேர்ந்த கொடூரம் 

அன்று, அலி கீரியோவும் தன்னுடைய சகோதரர் அஹ்மருடன் டேனியல் வீட்டுக்கு வந்திருந்தார்.அப்போது, டேனியல் தனக்கும் தனது காதலிக்கும் பர்கர் ஆர்டர் செய்திருந்தார். பர்கர் வந்த பிறகு, ஒரு பர்கரிலிருந்து கொஞ்சமாக அலி கீரியோ சாப்பிட்டிருக்கிறார்.

காதலிக்காக ஆசை ஆசையாக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்! | Youngster Killed His Friend For Girl Friend Burger

இதனால் கோபமுற்ற டேனியல், தன்னுடைய காதலிக்காக வாங்கியதையா சாப்பிடுகிறாயா என அலி கீரியோவிடம் கோபமடைந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த டேனியல், அங்கிருந்த காவலாளியிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அலி கீரியோவை சுட்டார். இதனால் படுகாயமடைந்த கீரியோ உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள், இந்த கொலைக்கு டேனியலே பொறுப்பு என விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.