இந்தியர்களுக்கு பீட்சா, பர்க்கர், ஐஸ்க்ரீம் அறிமுகம் செய்ததே இவர்தான் - யார் இவர்?
பீட்சா, பர்கர், ஹாட் சாக்லேட் இந்தியாவுக்கு அறிமுகமானது எப்படி தெரியுமா?
நிருலாஸ் கார்னர்
டெல்லியின் கன்னாட் பிளேஸில் ஒரு குடும்ப ஹோட்டல் மற்றும் உணவகமாக திறக்கப்பட்டது. அதில் இந்திய மற்றும் கான்டினென்டல் உணவகமாக நிருலாஸ் கார்னர் ஹவுஸை திறந்தனர். திறந்த சில நாட்களிலேயே பிரபலமானது.
1947ல் இந்தியா சுதந்திர அடைந்தபோது, உணவகத்தின் நிலைமை தலைகீழாக மாறியது. அதனால் அதே இடத்தில் 3 கடைகளை திறக்க நிருலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களின் குடும்பம் புதிய முயற்சிகளை தொடர்ந்தது.
பீட்சா அறிமுகம்
அருகில் உள்ள பகுதிகளில் மேலும் பல சிறப்பு உணவகங்களை திறந்தனர். தீபக் நிருலா மற்றும் அவரது உறவினரான லலித் நிருலாவின் நிர்வாகத்தின் கீழ், நிருலாஸ் புதிய உணவுகளை அறிமுகம் செய்தது. நடுத்தர வர்க்க இந்திய சமூகத்திற்கு குறைந்த விலையில் ஐஸ்கிரீம், பீட்சா, பர்கர்கள் மற்றும் குளிர்பானங்களின் சுவைகளை அறிமுகப்படுத்தினர்.
நிருலாஸ் நிறுவனம் பல இந்திய நகரங்களில் 85 விற்பனை நிலையங்களை திறந்தது. நிருலா குடும்பம் 2006ல் மலேசியாவில் உள்ள நவிஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்துக்கு நிருலாஸ் நிறுவனத்தை விற்று விட்டது. 2022ல் தீபக் நிருலா காலமானது குறிப்பிடத்தக்கது.