பீட்சா விலையை திடீரென பாதியாக குறைத்த பிரபல நிறுவனம் - காரணத்தை பாருங்க.!
பிரபல நிறுவனம் பீட்சா விலையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துள்ளது.
டாமினோஸ்
கடந்த 5 வருடத்தில் பீட்சா விற்பனையில் அதிகளவிலான உள்நாட்டு பிராண்டுகள், பிராந்திய பிராண்டுகள் வந்துள்ளது. பீட்சா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டாமினோஸ் மற்றும் பீட்சா ஹட் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பல உள்ளூர் பிராண்டுகள் தற்போது பிரபலமான பீட்சா பிராண்டுகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் சில சந்தைகளில் முன்னோடியாக உள்ளது.
விலை குறைப்பு
இதுமட்டும் அல்லாமல் சிறிய பிராண்டுகளும் விரைவான சேவை உணவகங்களுக்கு (QSRs) மாடலில் தனது வர்த்தகத்தை விரைவாக விரிவடைந்துள்ளது. இது அனைத்தும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த நெருக்கடியை தாங்காமல் டாமினோஸ் தனது பீட்சா விலையை குறைத்துள்ளது. கடந்த வாரம் வெஜ் லார்ஜ் பீட்சாக்களின் விலை ரூ.799ல் இருந்து ரூ.499 ஆகவும், அசைவ பெரிய பீட்சாக்களின் விலை ரூ.919ல் இருந்து ரூ.549 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக டாமினோஸ் தெரிவித்துள்ளது.
"குறைவாக பணம் செலுத்துங்கள், அதிகமாகப் பெறுங்கள்" எனவும் வாடிக்கையாளர்களுக்கு மெசெஜ் அனுப்பியுள்ளது. நிகர லாபம் 74% குறைந்து ரூ. 28.91 கோடியாகவும், அதேபோன்ற விற்பனையில் 1.3% சரிவையும் பதிவு செய்துள்ளது.