Fake ID மூலம் ஆண்களுடன் ஆபாச சேட் செய்த ஐ.டி ஊழியர் - அதிரடி கைது!
ஐ.டி ஊழியர் ஒருவர் Fake ID மூலம் பல ஆண்களுடன் ஆபாசமாக சேட் செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி அடையாளம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர், சென்னை போரூரில் தங்கி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் மோசடியில் ஈடுபட்டுவதாக அறிந்தார்.
அவர் உடனே சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துகொண்ட சைபர் கிரைம் போலீஸார், ஃபேக் ஐடி உருவாக்க பயன்படுத்திய இமெயில் மற்றும் செல்போன் எண்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணை
இந்நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், திருவொற்றியூர் எஸ்.பி கோவிலை சேர்ந்த ஐடி ஊழியரான தமிழ்மாறன்(23) என்பத்ன்னு தெரியவந்தது. இவர் அந்த புகாரளித்த பெண்ணின் நண்பர் என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் தனது ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்களை தெரியாமல் புகைப்படம் எடுத்து, அதனை டிபியாக வைத்து Fake ஐடி உருவாக்கியதும், அதிலிருந்து பல ஆண்களுடன் நள்ளிரவில் ஆபாச சாட்டிங் செய்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர், "லவ் டுடே" படத்தில் வருவது போல நண்பர்களை கலாய்ப்பதற்காக பேக் ஐடி உருவாக்கியதாகவும், ஆபாசமாக சேட் செய்யவில்லை என்றால் இரவில் தூக்கம் வருவதில்லை எனவும், அதுமட்டுமின்றி சில இளைஞர்களிடம் அவ்வபோது ஆயிரக்கணக்கில் பணம் பெற்று வந்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.