கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை - கடைசியாக செய்த காரியம் என்னன்னு பாருங்க

coimbatore younggirlcommitsuicide
By Petchi Avudaiappan Nov 29, 2021 08:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கோவையில்  கர்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த சஞ்சய் அரவிந்த் மனைவி சிந்துஜாவுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 வயதில் மகன் ஒருவர் உள்ளார். தற்போது சிந்துஜா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மேலும் சிந்துஜா கடந்த 8 மாதங்களாக கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை புரிந்து வரும் அவர் நேற்று முன்தினம் கணவன், மனைவி மற்றும் மகன் ஆகியோர் வீட்டில் இருந்த போது அரவிந்த் தனது மகனுடன் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, சிந்துஜா படுக்கையறையில் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்குபோட்டு கொள்வதாக செல்போனில் படம் எடுத்து அதனை தனது கணவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து இதனை பார்த்த சஞ்சய் அரவிந்த் அதிர்ச்சியடைந்து கதவை உடைத்து பார்த்த போது சிந்துஜா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக கீழே இறக்கி சிந்துஜாவின் அம்மாவிற்கு இது குறித்து தகவல் தெரிவித்து விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துஜாவை தனியார் மருத்துவமனைக்கு சஞ்சய் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிந்துஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிந்துஜாவின் தாயார் இந்திராணி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிந்துஜா குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.