திரைப்பட பாணியில்..காதலியை பார்க்க பர்தா அணிந்து வந்த இளைஞர் - வீடியோ படுவைரல்!

Viral Video Uttar Pradesh India
By Swetha Sep 03, 2024 08:30 AM GMT
Report

காதலியை சந்திக்க இளைஞர் ஒருவர் பர்தா அணிந்து வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 பர்தா

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் பர்தா அணிந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞர் சந்த் புரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது காதலியை சந்திக்க பர்தா அணிந்து வந்துள்ளார்.

திரைப்பட பாணியில்..காதலியை பார்க்க பர்தா அணிந்து வந்த இளைஞர் - வீடியோ படுவைரல்! | Youngman Wore Burqa To See His Gf Got Caught Video

அவரது நடத்தையில் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு சிலர் அவரை திருடன் என்றும் மற்றவர்கள் அவரை குழந்தை கடத்தல்காரராக இருக்கலாம் என்றும் சந்தேகித்து பர்தாவை கழற்று என தெரிவித்துள்ளனர்.

காதலிக்காக பர்தா அணிந்து வந்த வாலிபர் - போலீஸிடம் வசமாக சிக்கிய பின்னணி!

காதலிக்காக பர்தா அணிந்து வந்த வாலிபர் - போலீஸிடம் வசமாக சிக்கிய பின்னணி!

இளைஞர் 

பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறகு அந்த கும்பல் சிக்கிய இளைஞரிடம் ஆதார் அட்டையை காட்டுமாறு கூறி தாக்க தொடங்கினர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை சிறைபிடித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞரை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இ்ணையத்தில் பரவி வருகிறது.