காதலிக்காக பர்தா அணிந்து வந்த வாலிபர் - போலீஸிடம் வசமாக சிக்கிய பின்னணி!

Kanyakumari
By Sumathi Jan 20, 2023 06:32 AM GMT
Report

காதலியை சந்திக்க, பர்தா உடை அணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

யாரு சாமி நீ

கன்னியாகுமாரி மாவட்டம், குலசேகரம் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரியின் அருகே பர்தா உடை அணிந்து கொண்டு சந்தேகம்படும்படி ஒரு நபர் வளம் வருவதை அந்த கல்லூரி காவலாளிகள் கவனித்துள்ளனர்.

காதலிக்காக பர்தா அணிந்து வந்த வாலிபர் - போலீஸிடம் வசமாக சிக்கிய பின்னணி! | Man Who Went With Burda To Meet His Girlfriend

அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் பர்தா உடையில் அங்கு வந்தது தெரியவந்துள்ளது.

காதலிக்காக..

பின், அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளைஞரிடம் விசாரித்தபோது, அந்த நபர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும், அவர் தனது காதலியை நேரில் பார்த்து பேச பர்தா உடை அணிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பின், போலீசார் அந்த வாலிபருக்கு வார்னிங் குடுத்து, அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.