கல்யாணம் வேண்டாம் - லிவிங் டு கெதருக்கு அடம்பிடிக்கும் இளம் தலைமுறையினர்!
இளம் தலைமுறையினரிடையே லிவிங் டு கெதர் ஈர்ப்பு அதிகமாகியுள்ளது.
லிவிங் டு கெதர்
தி திரைவிங் சென்டர் ஃபார் சைக்காலஜி அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதில், சமீபத்திய தலைமுறையை சேர்ந்த காதலில் இருக்கும், அதே சமயம் திருமணமாகாத 906 பேரிடம் ஒரு சர்வேயை எடுத்துள்ளது.
65 சதவீத தம்பதிகள் லிவிங் டு கெதரில் வாழ்வதாகவும், அவர்களது வாழ்க்கையில் பணம் தான் முக்கியமான பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் திருமணம் என்பது மிகவும் பழைய சடங்கு,
இளைஞர்கள் விருப்பம்
85 சதவீதம் பேர் மகிழ்ச்சியான அர்ப்பணிப்புள்ள ஒரு காதல் வாழ்க்கைக்கு திருமணம் என்பது தேவையற்றது, 83 சதவீதம் பேருக்கு எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
லிவிங் டு கெதரில் இருக்கும் 65 சதவீதம் பேரில் 52 சதவீதம் பேர் வீட்டு வாடகை மற்றும் மற்ற இதர செலவுகளை சரிசமமாக பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமின்றி சமீபகாலமாக இந்தியாவிலும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்வது என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக முக்கிய பெருநகரங்களில் வசிக்கும் இளம் தலைமுறையினர் பலரும் லிவிங் டுகெதர் முறைக்கு ஆதரவளித்து வருகின்றனர்.