கையில் குழந்தை - பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த திருவாரூர் இளைஞர்!
பிலிப்பைன்ஸ் பெண்ணை தமிழக வாலிபர் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
லிவிங் டு கெதர்
திருவாரூர், தம்பிக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் அரவிந்தர்(33). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏர்போட்டில் கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.
அங்கு அருகே வேலை பார்த்த பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜாஸ்மின் ரமோஸ் பொசிடியோ(32) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அது காதலாக மாறி இருவரும் 2 வருடம் லிவ் இனில் வாழ்ந்து வந்துள்ளனர். இதில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
திருமணம்
இந்நிலையில், ரமேஷ் வீட்டிற்கு இருவரும் குழந்தையுடன் வந்துள்ளனர். அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். பின்னர் தங்களது வீட்டிலேயே எளிமையாக இங்குள்ள இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திருமணத்தை பதிவு செய்துள்ளனர். அப்போது, கடல் கடந்து வந்த ரமேஷ் அரவிந்தரை விரும்பி லிவிங் டுகெதராக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்
தற்போது இந்தியா நாட்டில் உள்ள தமிழகம் வந்து இங்கு உள்ள முறைபடி திருமணம் செய்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் இங்குள்ள கிராம சூழலை பார்க்கும்போது மகிழ்ச்சியை தருகிறது என பிலிப்பைன்ஸ் பெண் தெரிவித்துள்ளார்.