காதலியை இந்து முறைப்படி திருமணம் செய்தார் குக் வித் கோமாளி புகழ்
குக் வித் கோமாளி புகழ்-க்கு இன்று காலை இந்து முறைப்படி நடிகர் சசிகுமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
புகழ்-க்கு திருமணம்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் புகழ் என்ற புகழேந்தி. இவர் அண்மையில் வெளியான யானை திரைப்படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் மேலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கோயம்புத்துார் உமர்பரிதா என்பவரின் மகளான பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலியை இன்று கரம் பிடித்தார்.
விழுப்புரம் மாவட்டம் தீவனுார் பொய்யாமொழி விநாயர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு சென்ற இயக்குநரும், நடிகருமான சசிகுமார் மலர் துாவி வாழ்த்தினார்.
இந்த திருமணத்தில் மதுரை முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களின் திருமணம் நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு புகழ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.