நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஆபாச நடனமாடிய பெண்கள் - சர்ச்சை வீடியோ!

Viral Video Uttar Pradesh
By Sumathi Mar 27, 2024 07:29 AM GMT
Report

இளம்பெண்கள் வெளியிட்ட ஆபாச நடன வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹோலி பண்டிகை

இந்தியா முழுவதும் அண்மையில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலர் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஆபாச நடனமாடிய பெண்கள் - சர்ச்சை வீடியோ! | Young Women Obscenity Dance Video Viral

அந்த வரிசையில், இளம்பெண்களின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்ட இரண்டு பெண்கள் வாகனத்தில் எதிரெதிரே அமர்ந்துக்கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை செய்கின்றனர்.

ஆபாச நடனம்.. ராம்லீலா நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை!

ஆபாச நடனம்.. ராம்லீலா நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை!

சர்ச்சை வீடியோ

இதனைத் தொடர்ந்து, சாலையில் ஆபத்தான முறையில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துக்கொண்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, பெண்கள் அமர்ந்து நடனமாடிய இருசக்கர வாகனத்திற்கு நொய்டா போலீஸ் ரூ.33,000 அபராதம் வித்தித்துள்ளனர். ஆனால், சம்மந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.