திருவிழா என்ற பெயரில் ஆபாச ஆடலும் பாடலுமா? உயர்நீதிமன்றம் காட்டம் - இனி..?

Tamil nadu Festival
By Sumathi Sep 14, 2022 07:23 AM GMT
Report

திருவிழாவில் சினிமா பாடலுக்கு ஆடவும், பாடவும் இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

குலசை திருவிழா

குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பல இடங்களில் இருந்து மக்கள் வருவதுண்டு. இந்த திருவிழாவின் போது, பார்வையாளர்களின் கவனம் ஈர்க்க பார் நடன மங்கையர்,

திருவிழா என்ற பெயரில் ஆபாச ஆடலும் பாடலுமா? உயர்நீதிமன்றம் காட்டம் - இனி..? | Dussehra Festival In Kulasekarapattinam

துணை சினிமா நடிகைகள், சின்னத் திரை நாடக நடிகர்களை அதிக பணம் கொடுத்து அழைத்து வந்து, சினிமா பாடல்களுக்கு ஆடும் முறை வழக்கமானது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும்

ஆடலும் பாடலும்

சினிமா பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். நடிகர் நடிகைகள் அரை குறை ஆடைகளுடன் ஆபாச உடையணிந்து ஆடுவது மாற்று மதத்தினர் மத்தியில் நன்மதிப்பை குறைக்கிறது.

திருவிழா என்ற பெயரில் ஆபாச ஆடலும் பாடலுமா? உயர்நீதிமன்றம் காட்டம் - இனி..? | Dussehra Festival In Kulasekarapattinam

மைசூர் போல் பல வெளி நாட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய தசரா ஆன்மீக திருவிழாவின் மதிப்பு, சிலருடைய செயல்களால் குறைந்து வருகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் திருவிழா தொடங்குவது முதல் முடியும் வரை நேரில் சென்று கண்காணித்து,

பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப் படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கோவில் திருவிழாக்களில், ஆபாச நடனங்கள் ஆடவதையும், பாடல்களை இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக கூறியுள்ளனர்.