குடும்ப தகராறு: நடுரோட்டில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் - பரபரப்பு
மனைவியை பட்டப்பகலில் கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
மதுரை தெற்கு வாசல் சப்பாணி கோயில் தெருவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரத்தின் மகள் வர்ஷாவை, கீரைத்துறையைச் சேர்ந்த பழனி என்ற எம்.பி.ஏ படித்த இளைஞர் காதலித்துவந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதனால், இருவரும் தனியாக சென்று திருமணம் செய்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு திரும்ப வர வற்புறுத்தி பழனி தகராறு செய்துள்ளார்.
குடும்ப தகராறு
நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றுக்கொள்ள போலீஸ் ஆலோசனை கூறி அனுப்பிவைத்த நிலையில் தொல்லை செய்துள்ளார் பழனி. சம்பவத்தன்று, வர்ஷா டையில் பொருள் வாங்கிவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில் அவரை டூ வீலரில் வந்து வழிமறித்து, மீண்டும் தகராறில் ஈடுபட்ட பழனி மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து வர்ஷாவை முகம், கழுத்து எனப் பல பகுதிகளில் குத்திவிட்டு தப்பித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடந்த பகுதியினர் புகாரளித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். பழனி காவல்நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் வர்ஷாவின் உறவினர் ஒருவரைக் காதலிக்க முயன்று,
அது நடக்காத நிலையில் அடுத்ததாக வர்ஷாவைக் காதலித்து திருமணம் செய்தாராம் பழனி. அந்த விஷயம் தெரிந்துதான் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.