காபியில் விஷம் கலந்த கணவன் வீட்டினர்- இளம்பெண் கொடூர கொலை!
உதகையில் கடந்த மாதம் 23ம் தேதி இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், கணவர், மாமியார், மைத்துனர் உள்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
உதகை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பென்னட் பகுதியைச் சேர்ந்த ஜவஹரில்லா -யாப்பின் தம்பதிக்கு இம்ரான், முக்தா என 2 மகன்கள் உள்ளனர். இதில் 27 வயதான இம்ரானுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டி வண்டிச்சாலை பகுதியைச் சேர்ந்த ஆஷாகி பர்வீன் (22) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தது.
இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி ஆஷாகி பர்வீன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட நீலகிரி காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆஷாகி பர்வீன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர் . இது தொடர்பாகக்வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பிரேதப் பரிசோதனையின் முடிவில் ஆஷாகி பர்வீன் சயனைடு கலந்த காஃபி குடித்ததால் தான் உயிரிழந்தது உறுதியானது.
வரதட்சணை
இதையடுத்து காவல்துறையினர் கணவர், மாமியார், மைத்துனர் உள்பட 4 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அப்போது ஆஷாகி பர்வீனின் கணவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தான் கூடுதல் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும், இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆஷிகாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
நகைக்கடையில் நகைகளுக்கு பாலீஷ் போடப்படும் சயனைடு கலந்த விஷத்தை காபியில் கலந்து ஆஷாகி பர்வீனுக்கு கொடுத்துள்ளனர். இதைக் குடித்துத் தான் அவர் உயிரிழந்துள்ளார் என வாக்கு மூலம் அளித்தனர். இதனையடுத்து கணவர், மாமியார், மைத்துனர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்